தென்னம்பட்டு கிராமத்தில் நேரடி நெல் கொள்முதல் திறப்பு
தென்னம்பட்டு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது.
By : King 24X7 News (B)
Update: 2024-03-04 15:18 GMT
செய்யாறு அருகே வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியம் தென்னம்பட்டு கிராமத்தில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் ஒ.ஜோதி திறந்து வைத்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் 71வது பிறந்தநாளை முன்னிட்டு திமுக கொடி ஏற்றி,இனிப்பு, அன்னதானம் பொதுமக்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் கா.லோகநாதன் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் வெம்பாக்கம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மாமண்டூர் D.ராஜு ஒன்றிய கழக செயலாளர்கள் தினகரன் ஞானவேல் மற்றும் அரசு அதிகாரிகள் திமுக கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.