ஆத்தூர் : கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு !
ஆத்தூர் உடையார்பாளையத்தில் திமுக சார்பில் கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலகம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளர் சிவலிங்கம் திறந்து வைத்தார்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 07:39 GMT
திமுக தேர்தல் அலுவலகம் திறப்பு
கள்ளக்குறிச்சி மக்களவைத் தொகுதியில் திமுக சார்பில் மலையரசன் போட்டியிடுகிறார். இந்நிலையில் சேலம் மாவட்டம், ஆத்தூரில் உடையார்பாளையத்தில் திமுக சார்பில் கள்ளக்குறிச்சி மக்களவை தொகுதி தேர்தல் அலுவலகம் சேலம் கிழக்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிவலிங்கம் கலந்து கொண்டு திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட திமுக பொருளாளர் ஆத்தூர் ஸ்ரீராம் நகர செயலாளர் பாலசுப்ரமணியன் நகர மன்ற தலைவர் அலெக்சாண்டர் நரசிம்மபுரம் நகர செயலாளர் வேல்முருகன், நகர நிர்வாகிகள் நகர மன்ற உறுப்பினர்கள் நகர திமுக நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.