பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா

பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க விழா நடைபெற்றது.

Update: 2024-06-30 13:16 GMT

விழாவில் கலந்து கொண்டவர்கள் 

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா,சாதனை மாணவிகளுக்கு பாராட்டு விழா நடந்தது.பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற இலக்கிய மன்றத் துவக்கவிழாவிற்கு அப்பள்ளி தலைமையாசிரியர் நிர்மலா தலைமை தாங்கினார்.தமிழாசிரியர் சுதா வரவேற்புரை ஆற்றினார்.

ஒய்வு பெற்ற தமிழாசிரியர் கு.ம.திருப்பதி சிறப்பு விருந்திருந்தினராக கலந்து கொண்டு இலக்கிய சிறப்புரையாற்றினார். தமிழாசிரியர் பூமிதேவி, முதுகலை தமிழாசிரியர் கவிதா, இந்திராகாந்தி, சர்மிளா, ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

பின்பு முறையாக தொடங்கிய இலக்கிய மன்றத் தொடக்கவிழாவில் சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகை நூல்களில் அகநானூறு, ஐங்குறுநூறு,பக்தி இலக்கியம், செம்மொழியான தமிழ் மொழி நடனம்,திருவிளையாடற்புராணம் நாடகம், இயல், இசை,நாடகம் என முத்தமிழையும் மாணவிகள் நிகழ்த்தி காட்டினர். கருத்தரங்கத்தில் மரபுக்கவிதை,

புதுக்கவிதை, பழமையும், புதுமையும் என தாய் தமிழ் மொழியில் மாணவிகள் வீர உரையாற்றினர். இந்நிகழ்ச்சிகளை தமிழாசிரியர் சுதா தொகுத்து வழங்கினார். மேலும் இலக்கிய மன்ற துவக்கவிழாவில் இயல், இசை, நாடகம் என முத்தமிழையும் நிகழ்திக்காட்டிய மாணவிகளை ஊக்குவித்து பரிசு வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது.

அதேபோன்று இவ்விழாவில் திருச்செந்தூரில் நடைபெற்ற 1000 மாணவிகள் பங்குபெற்ற பரத நாட்டிய சாதனை விழாவில் கலந்து கொண்ட பொன்னமராவதி இளந்தளிர் கலையகம் நடன ஆசிரியர் சுகன்யா சதிஷ்குமார் தலைமையில் பரத நாட்டியம் பயின்று வரும் பொன்-புதுப்பட்டி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 8 பேர் கலந்து கொண்டு பரத நாட்டியத்தில் உலக சாதனை படைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றனர்.

சாதனை படைத்த மாணவிகள் பாராட்டு நற்சான்றிதழை ஆசிரியர்களிடம் காண்பித்து வாழ்த்து பெற்றனர்.

இந்நிகழ்வில் அப்பள்ளி ஆசிரியர்கள், பெற்றோர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர்,மாணவிகள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் முடிவில் தமிழாசிரியர் பூமிதேவி நன்றியுரை வழங்கினார்.

Tags:    

Similar News