புதிய அங்கன்வாடி கட்டடம், உணவு தானிய கிடங்கு திறப்பு

மயிலாடுதுறை அருகே ஆக்கூர் ஊராட்சியில் ரூ.26.67 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடம் மற்றும் உணவு தானிய கிடங்கு கட்டடத்தை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி, பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம்.முருகன் முன்னிலையில் திறந்து வைத்தார்.

Update: 2024-03-15 08:27 GMT

திறப்பு விழா 

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்திற்குட்பட்ட ஆக்கூர் ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.12.67 இலட்சம் மதிப்பில் புதிய உணவு தானியக் கட்டடம் கட்டப்பட்டுள்ளதையும், ரூ.14.00 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி கட்டடத்தையும் மாவட்ட ஆட்சியர் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில், செம்பனார்கோவில் ஒன்றியக்குழு தலைவர் .நந்தினி ஸ்ரீதர் , செம்பனார்கோவில் ஒன்றிய குழு துணைத்தலைவர் பாஸ்கரன் , ஒன்றிய குழு உறுப்பினர் வே.சாந்தி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமதி.மஞ்சுளா,திருமதி.மீனா, ஊராட்சிமன்ற தலைவர் சந்திரமோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News