நகராட்சி புதிய கட்டிடம் திறப்பு !
திருக்கோவிலூர் நகராட்சி புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-08 10:50 GMT
கட்டிடம் திறப்பு
திருக்கோவிலூர் நகராட்சி புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள். அதனை திருக்கோவிலூரில் நகர மன்ற தலைவர் T.N.முருகன் தலைமை ஏற்று திறந்து வைத்தார்கள். நிகழ்ச்சியில் நகராட்சி ஆணையர் கீதா நகர மன்ற துணை தலைவர் உமாமகேஸ்வரி குணா ,நகர செயலாளர் ஆர்.கோபிகிருஷ்ணன் நகர அவை தலைவர் T.குணா உள்ளிட்ட நகர மன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி பொறியாளர்கள் நகராட்சி ஊழியர்கள் ஒப்பந்ததாரர்கள் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.