குருவப்பன்பேட்டையில் ஊராட்சி செயலகக் கட்டிடம் திறந்து வைப்பு
குருவப்பன்பேட்டையில் ஊராட்சி செயலகக் கட்டிடத்தை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.;
Update: 2024-03-15 17:49 GMT
ஊராட்சி செயலகக் கட்டிடம்
குறிஞ்சிப்பாடி ஒன்றியத்திற்கு உட்பட்ட குருவப்பன்பேட்டை ஊராட்சியில் MGNREGS 15 நிதி குழு திட்டத்தின் கீழ் ரூ.39.95 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள குருவப்பன் பேட்டை ஊராட்சி செயலகக் கட்டிடத்தை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.உடன் மாவட்ட ஆட்சித் தலைவர் அருண் தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.