காட்டுக்கோட்டை ஊராட்சியில் பகுதிநேர நியாயவிலை கடை திறப்பு விழா

ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சியில் 10 லட்சம் மதிப்பீட்டில் பகுதி நேர நியாய விலை கடை முன்னாள் எம்எல்ஏ சின்னதுரை திறந்து வைத்தார்.

Update: 2024-03-16 14:19 GMT

பகுதிநேர நியாவிலை கடை திறப்பு

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை ஊராட்சியில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பகுதி நேர நியாய விலை கடை பணிகள் முடிவுற்ற நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னதுரை திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் தலைவாசல் வடக்கு ஒன்றியச் செயலாளர் பாலமுருகன், தலைவாசல் மத்திய ஒன்றியச் செயலாளர் மணி (எ ) பழனிச்சாமி, காட்டுக்கோட்டை ஊராட்சி மன்றத் தலைவர் அன்பழகன். மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் நல்லம்மாள். Ex. ஊராட்சி மன்ற தலைவர் அமுதராணி சண்முகம். ஏகம்பால்லதா இளங்கோவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News