தர்மபுரியில் தபால் வாக்குகள் என்னும் பணி துவக்கம்

தருமபுரி மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை மையம் செட்டிக்கரை அரசு பொறியில் கல்லூரியில் தபால் ஓட்டு துவங்கியது.

Update: 2024-06-04 04:00 GMT

தர்மபுரி வாக்கு என்னும் மையத்தில் மையத்தில் சட்டமன்ற தொகுதி வாரியாக பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு தனித்தனியே ஆறு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.ஒவ்வொரு மையத்திலும் 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன.குறைந்த பட்சம் பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 20 சுற்றுகளாகவும், அதிகபட்சம் பாப்பிரெட்டிப்பட்டி, மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் 23 சுற்றுகளாகவும் வாக்குகள் எண்ணப்பட உள்ளன.

தபால் வாக்குகள் எண்ணுவதற்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளன வாக்கு எண்ணும் ஒவ்வொரு பகுதியும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு தீவிர கண்காணிப்பு வாக்கு எண்ணிக்கையையொட்டி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு ஐந்து அடுக்கு பாதுகாப்புகள் போடப்பட்டு ள்ளன.தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் ஆ.மணி, அதிமுக சார்பில் டாக்டர் அசோகன், பாஜக கூட்டணி சார்பில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயா உள்ளிட்ட 24 பேர் போட்டியிட்டனர் தருமபுரி மக்களவைத் தொகுதியின் மொத்த வாக்காளர்கள் 15 லட்சத்து 24ஆயிரத்து 896 கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி பதிவான வாக்குகள் 12 லட்சத்து 38 ஆயிரத்து 183 தருமபுரி மக்களவைத் தொகுதியில் மொத்தம் 81.20 சதவீதம் வாக்குகள் பதிவாகி தமிழகத்தில் அதிக வாக்குகள் பதிவாகி முதலிடத்தைப் பிடித்தது.

அதிகபட்சமாக பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் 84.94 சதவிகிதம் வாக்குகள் பதிவாகின.இவை தமிழகத்தில் அதிக வாக்குகள் பெற்ற சட்ட மன்ற தொகுதியாகும்.திமுக தரப்பில் வக்கீல் ஆ.மணியும், பா.ம.க.தரப்பில் பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் மனைவி சவுமியா அன்புமணி போட்டியிடுவதால் தருமபுரி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது. ஆகவே அதிக எதிர்பார்ப்பில் திமுகவினரும், பா.ம.க.வினரும் காத்திருக்கின்றனர்.

Tags:    

Similar News