விநாயகா மிஷினில் சுவாச பராமரிப்பு தொழில் நுட்ப பாட பிரிவு துவக்கம்

விநாயகா மிஷன் அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சுவாச பராமரிப்பு தொழில் நுட்ப பாட பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-08 06:16 GMT

உலக ஆஸ்துமா தின விழிப்புணர்வு  

விநாயகா மிஷன் விம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையில் சுவாச கோளாறுகளை கண்டறிதல், சிகிச்சை மற்றும் மேலாண்மை குறித்த பாடப்பிரிவான பி.எஸ்சி. சுவாச பராமரிப்பு தொழில்நுட்ப பிரிவு என்ற புதிய பாடம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பாட பிரிவில் மாணவர்கள் சுவாச சிகிச்சை குறித்த நுணுக்கங்கள், நோய் அறிதல், மேம்பட்ட தொழில்நுட்பங்கள் குறித்து படித்து மருத்துவமனைகளில் பணிபுரியலாம்.

இப்புதிய சுவாச பராமரிப்பு தொழில்நுட்பம் மூலம் ஆஸ்துமா குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில் உலக ஆஸ்துமா தினம் கல்லூரி வளாகத்தில் நடந்தது. துறையின் டீன் செந்தில்குமார் முன்னிலை வகித்து வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக விம்ஸ் மருத்துவமனையின் பொது மருத்துவர் கிருஷ்ணஷெட்டி, சுவாச மருத்துவம் மற்றும் நுரையீரல் பிரிவு ஆலோசகர் கணேஷ் பாலன் ஆஸ்துமா உண்டாவதற்கான காரணிகள், தடுக்கும் வழிமுறைகள், சிகிச்சை குறித்து விளக்கி கூறினார். இதில் துறையை சேர்ந்த மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை துறையின் உதவி பேராசிரியர் ராகுல் செய்து இருந்தார்.

Tags:    

Similar News