திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.;
Update: 2024-05-07 09:48 GMT
தண்ணீர் பந்தல்
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த எலத்தூர் மோட்டூர் நட்சத்திர சுயம்பு சிவசுப்பிரமணியர் சுவாமி கோவில் அருகில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.இதில் எம்எல்ஏ சரவணன் கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, முலாம்பழம், மோர், தண்ணீர் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் அண்ணாதுரை, கலசபாக்கம் ஒன்றிய செயலாளர்கள் சிவகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.