விருதுநகரில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: அமைச்சர் பங்கேற்பு
விருதுநகர் திமுக வடக்கு மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு தலைமையில் நீர், மோர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நிதித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்றார்.;
தண்ணீர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர்
தற்போது தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ள நிலையில்பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். அதனை முன்னட்டு தமிழகம் முழுவதும அனைத்து கட்சிகள் மற்றும் சார்பாகவும் மற்றும் சமூக ஆர்வலர்கள் சார்பாக பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர், மோர் பந்தல் அமைத்து அவைகளை பொதுமக்களுக்கு வழங்கி சேவை செய்து வருகின்றனர்.
அதனை முன்னிட்டு இன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள அண்ணா சிலை முன்பு வடக்கு மாவட்ட திமுக விளையாட்டு மேம்பாட்டு அணி சார்பாக மாவட்ட அமைப்பாளர் ராஜகுரு தலைமையில் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முன்னிலையில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நீர் ,மோர் பந்தல் துவக்கி வைக்கும் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நீர் மோர் பந்தலை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் துவக்கி வைத்து பொதுமக்களுக்கு மோர், தண்ணீர்,தர்ப்பூசணி போன்றவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்வில் விருதுநகர் சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், நகரதலைவர் S.R.S.தனபால், யூனியன் சேர்மன் மாதவன் மற்றும் வடக்கு மாவட்ட திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்