சேலத்தில் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை

சேலத்தில் நுகர்வோர் உரிமைகள் இயக்கம் சார்பில் மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

Update: 2024-07-01 12:30 GMT

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கல்

நுகர்வோர் உரிமைகள் இயக்கம், பாரதி உரிமைகள் அறக்கட்டளை சார்பில் முப்பெரும் விழா சேலத்தில் நேற்று நடந்தது. அமைப்புகளின் நிறுவனர் பூபதி தலைமை தாங்கினார். நிர்வாகி வெங்கடேசன் வரவேற்றார்.

பாஸ்கரன் தீர்மானங்களை வாசித்தார். சேவை திட்டங்கள் குறித்து சண்முகசுந்தரம் பேசினார். ஹில் சிட்டி ரோட்டரி தலைவர் அருள்விக்னேஷ், கவுரவா சிமெண்டு நிர்வாக இயக்குனர் ஜெகன்மோகன், கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் தேவஸ்தானம் தலைவர் வேணுகோபால் செட்டியார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா, பிளாஸ்டிக் விழிப்புணர்வு ஏற்படுத்த மஞ்சள் துணிப்பையை வெளியிட்டார். தொடர்ந்து அரசு பள்ளிகளில் படித்து உயர்கல்விக்கு செல்லும் மாணவ, மாணவிகள் 40 பேருக்கு தலா ரூ.1,000 வீதம் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை அமல்படுத்தி அரசின் நலத்திட்டங்கள் பொதுமக்கள் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

10 ரூபாய் நாணயங்களை பெரும்பாலான கடைகளில் வாங்குவது இல்லை. அதை வாங்க வலியுறுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில், ஆடிட்டர் ராஜபாலு நன்றி கூறினார்.

Tags:    

Similar News