வெயிலின் தாக்கம் அதிகரிப்பு - பொதுமக்கள் கடும் அவதி
தூத்துக்குடியில் வெயில் தாக்கம் அதிகரித்து வருவதால் மக்கள் கடும் வெப்பத்தை சமாளிக்க முடியாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
Update: 2024-04-09 01:35 GMT
தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாள்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. மேலும் காலை 11 மணிமுதல் மாலை 3 மணிவரை அனல்காற்று வீசுவதால் சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் தூத்துக்குடி முத்துநகா் கடற்கரை காலை 9 மணிமுதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும். அதன்படி, ஞாயிற்றுக்கிழமையில் முத்துநகா் கடற்கரையில் காலை முதல் மக்கள் கூட்டம் அதிகமாக காணப்படும். ஆனால், வெயில் தாக்கம் அதிகமாக இருந்ததால், பகல் நேரத்தில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் முத்துநகா் கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது.