கள்ளக்குறிச்சியில் எள் வரத்து அதிகரிப்பு

கள்ளக்குறிச்சியில் எள் வரத்து அதிகரிப்பு.

Update: 2024-04-30 05:08 GMT

எள் வரத்து அதிகரிப்பு

கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் எள் மூட்டைகள் வரத்து அதிகரித்ததால் ஒரே நாளில் 1.69 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கள்ளக்குறிச்சி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த விவசாயிகள் தங்களது விளைநிலத்தில் அறுவடை செய்த பயிர்களை விற்பனை செய்வதற்காக மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வருகின்றனர். அதன்படி, வேர்க்கடலை 15 மூட்டைகள், எள் 1,300, உளுந்து 10, நாட்டு கம்பு 19, எச்.பி., ரக கம்பு, ஆமணக்கு, கொள்ளு மற்றும் ராகி ஆகியவை தலா 1 மூட்டை, மக்காச்சோளம் 250, சிவப்பு சோளம் 15 என மொத்தமாக 1,613 மூட்டை விளை பொருட்களை விவசாயிகள் கொண்டு வந்தனர். சராசரியாக, ஒரு மூட்டை எள் 13,813 ரூபாய்க்கும், மக்காச்சோளம் 2,259, வேர்க்கடலை 8,067, உளுந்து 9,264, நாட்டு கம்பு 5,858, ஆமணக்கு 5,200, எச்.பி., ரக கம்பு 2,750, ராகி 2,229, கொள்ளு 4,599, சிவப்புசோளம் 5,694 ரூபாய்க்கும் கொள்முதல் செய்யப்பட்டது. கமிட்டியில் மொத்தமாக 1 கோடியே 69 லட்சத்து 11 ஆயிரத்து 452 ரூபாய்க்கு நேற்று வர்த்தகம் நடந்தது.
Tags:    

Similar News