காய்கறிகள் விலை உயர்வு

வரத்து குறைவால் காய்கறிகள் விலை உயர்ந்துள்ளது.;

Update: 2023-11-01 10:23 GMT

காய்கறி விலை உயர்வு

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
தென்தமிழகத்தின் மிகப்பெரிய காய்கறி சந்தையாக ஒட்டன்சத்திரம் மார்க்கெட் விளங்குகிறது. சுற்று வட்டார பகுதிகளான காவேரியம்மாபட்டி, அரசப்பபிள்ளைபட்டி, கொசவபட்டி, அம்பி ளிக்கை, கள்ளிமந்தையம், கேதையரும்பு, இடைய கோட்டை உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 500 ஏக்கருக்கு அதிகமான நிலப்பரப்பில் காய்கறி சாகுபடி நடைபெற்று வருகிறது. இங்கிருந்து ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டுக்கு கொண்டு வரப்படும் காய்கறிகள் வெளி மாவட்டங்கள், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன.தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் காய்கறிகளின் தேவை அதிகரித்துள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த தொடர்மழை காரணமாக மார்க்கெட்டுக்கு காய்கறிகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் பெரும்பாலான காய்கறிகளின் விலை திடீரென அதிகரித்து உள்ளது இல்லத்தரசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஆயுதபூஜை, பொங்கல் மற்றும் பூஜை நாட்களில் அர்ஜூனா பூசணிக்காய் அதிக அளவில் விற்பனை செய்யப்படும். இங்கிருந்து மகாராஸ்டிரா, மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. தற்போது வெளி மாநில வியாபாரிகள் வராததால் பூசணிக்காய் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. வழக்கமாக 1 கிலோ ரூ.18 முதல் ரூ.20 வரை விலை கேட்கப்படும். ஆனால் தற்போது ரூ.7க்கு மட்டுமே விலை கேட்கப்படுவதால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். இதுதவிர மற்ற காய்கறிகளின் வலை கனிசமாக உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News