மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு அதிகரிப்பு
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து நீர் திறப்பு 600 கன அடியாக அதிகரித்துள்ளது
Update: 2024-01-01 04:12 GMT
சேலம் மாவட்டம், மேட்டூர் அணையிலிருந்து குடிநீர் தேவைக்கான நீர் திறப்பு 600 கன அடியாக அதிகரிப்பு. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 600 கன அடியிலிருந்து 807 கன அடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் 71.27 அடியாகவும், நீர் இருப்பு 33.80 டி.எம்.சி.யாகவும் உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடியிலிருந்து 600 கன அடியாக அதிகரித்து தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.