மாறி வரும் உணவு பழக்கத்தால் சர்க்கரை நோய் அதிகரிப்பு

மாறி வரும் உணவு பழக்கத்தால் சர்க்கரை நோய் அதிகரித்துள்ளது என கருத்தரங்கில் டாக்டர்கள் பேசினர்.

Update: 2024-06-24 14:25 GMT

மாறி வரும் உணவு பழக்கத்தால் சர்க்கரை நோய் அதிகரித்துள்ளது என கருத்தரங்கில் டாக்டர்கள் பேசினர்.


சேலம் டயாபடீஸ் அசோசியேசன் சார்பில் சர்க்கரை நோய் குறித்து தற்போது ஏற்பட்டிருக்கும் மருத்துவ முன்னேற்றங்கள் மற்றும் மாற்றங்கள் குறித்த கலந்தாய்வு மற்றும் 9-வது கருத்தரங்கு சேலம் மாமாங்கம் பகுதியில் உள்ள தனியார் ஓட்டலில் நேற்று நடந்தது. இதில் சேலம் சுற்றுவட்டார மாவட்டங்களில் இருந்து சுமார் 500-க்கும் மேற்பட்ட டாக்டர்கள் கலந்து கொண்டனர். பெங்களூருவை சேர்ந்த மருத்துவ பொறியாளர் டாக்டர் ஆனந்த சுரேஷ், கேரளாவை சேர்ந்த டாக்டர் பிரதோஷ் கங்காதர், சென்னை டாக்டர் சுருதி சந்திரசேகர், கோவை வித்யாராஜீவ், வெங்கோ ஜெயபிரசாத், சேலம் இஸ்ரத், கோவிந்தராஜ் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்டு சர்க்கரை நோய் சிகிச்சையில் உலக அளவில் தற்போது ஏற்பட்டிருக்கும் முன்னேற்றம் குறித்தும், புதிய கண்டுபிடிப்புகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தனர்.

இந்த கருத்தரங்கம் குறித்து டாக்டர்கள் பழனிவேல் ராஜன், விஜயபாஸ்கர் ஆகியோர் கூறுகையில், உலக அளவில் சர்க்கரை நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதற்கு நமது மாறி வரும் உணவு பழக்க வழக்கம் மற்றும் போதிய உடற்பயிற்சி இல்லாததே காரணம். சர்க்கரை நோய், ரத்தகொதிப்பு, ஆஸ்துமா போன்ற நோய் வந்தால் அதை முற்றிலும் குணப்படுத்த முடியாது. ஆனால் முன்கூட்டியே கண்டறிந்து உரிய மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டால் கட்டுப்படுத்தமுடியும். அதேபோல் தினமும் ½ மணி நேரம் நடைப்பயிற்சியில் ஈடுபட்டால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். கொழுப்புச்சத்து (கொலஸ்ட்ரால்) அதிகமானால் மாரடைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பு உள்ளது என்றனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம் டயாபடீஸ் அசோசியேசன் அமைப்பின் தலைவர் டாக்டர் பிரேம்குமார், புரவலர்கள் கிருஷ்ணசெட்டி, அழகியநம்பி, ராஜகணேசன், துணைத்தலைவர்கள் கந்தசாமி, சதீஸ்குமார், செயலாளர் கார்த்திகேயன், மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் ரவிசங்கர், டாக்டர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

Tags:    

Similar News