சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி !
தென்காசியில் சுயேட்சை வேட்பாளரின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது.;
By : King 24x7 Angel
Update: 2024-03-29 06:00 GMT
ஆட்சியர் அலுவலகம்
தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ்வரன் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். வேட்புமனு பரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் உரிய ஆவணங்கள் இல்லாததால் கோவில்பட்டி சேர்ந்தால் வெங்கடேஷ்வரனின் வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆத்திரம் அடைந்த வெங்கடேஷ்வரன் தேர்தல் நடத்தும் அலுவலர், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பியதால் தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.