பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதியில் சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் !

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு இன்று 14 சுயேச்சை வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

Update: 2024-03-27 11:29 GMT

வேட்பு மனு தாக்கல்

2024 பாராளுமன்ற தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு இதற்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்ற வரும் நிலையில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு பல்வேறு கட்சியினர், அமைப்பினர் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்து வரும் நிலையில் மார்ச் 26ஆம் தேதிகாலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை இன்று ஒரே நாளில் 14 சுயேச்சை வேட்பாளர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கற்பகத்திடம் தங்களது வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளனர், அதன்படி பெரம்பலூரை சேர்ந்த தமிழக நாயுடு கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜ், லால்குடியைச் சேர்ந்த தங்கவேல் மகன் பாரி - 65, கவுல் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த ரங்கராஜ் மகன் ஆனந்தராஜ் 39, திருச்சி தில்லைநகர் பகுதி சேர்ந்த அம்பிகா பகுதி மகன் வாசுதேவன் 60 குளித்தலையைச் சேர்ந்த கந்தசாமி மகன் மனோகரன் 63, எளம்பலூர் கிராமத்தைச் சேர்ந்த சுந்தரம் மகன் ரங்கராஜ் 40 , திருச்சி சேர்ந்த அம்பிகாபதி மகன் வாசுதேவன் 60, திருச்சி மாவட்டம் லால்குடியை சேர்ந்த மரியதாஸ் மகன் தமிழக மக்கள் நல கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளராக உள்ள எபினேசன் 52, திருச்சி வரகுனேரி பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் இளங்கோவன் 57, ராமசாமி மகன் இளங்கோவன் 57, உள்ளிட்ட 14 சுயேச்சை வேட்பாளர்கள் செய்துள்ளனர். மேலும் மார்ச்27 ஆம் தேதியுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவடைய உள்ளது என்பதும் இதுவரை பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு மாற்று வேட்பாளர் உட்பட மொத்தம் 27 பேர் வேட்பாளராக வேட்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News