சுயேச்சை வேட்பாளர் வேட்புமனு தாக்கல்!
வேட்பு மனு தாக்கல் முதல் நாள் இன்று சுயேட்சை வேட்பாளர் சிவனேஸ்வரன் தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலகமான லட்சுமிபதியிடம் தாக்கல் செய்துள்ளார்.
Update: 2024-03-20 07:26 GMT
வேட்பு மனு தாக்கல் முதல் நாள் இன்று சுயேட்சை வேட்பாளர் சிவனேஸ்வரன் தனது வேட்புமனுவை மாவட்ட ஆட்சியரும் தேர்தல் நடத்தும் அலுவலகமான லட்சுமிபதியிடம் தாக்கல் செய்துள்ளார். இந்திய தேர்தல் ஆணையத்தால் பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 அறிவிப்பு வெளியிடப்பட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் தேர்தல் பணிகள் நடைபெற்று வருகின்றன. 36.தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதிக்கு வேட்பு மனுக்கள் இன்று முதல் 27.03.2024 வரை முற்பகல் 11:00 மணி முதல் பிற்பகல் 3:00 மணி வரை நடைபெறுகிறது. தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான லட்சுமிபதியிடம் உமரிகாடு பகுதியைச் சார்ந்த 35 வயதான சுயேட்சை வேட்பாளர் சிவனேஸ்வரன் என்பவர் தனது வேட்பு மனுவை இன்று தாக்கல் செய்துள்ளார். இவர் சென்னையில் உள்ள ஒரு உணவு கம்பெனியில் வேலை பார்க்கிறார் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது இவரது மனைவி சென்னை ட & T Ltd நிறுவனத்தில் HR ஆக உள்ளார். மேலும் இன்றைய தினம் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனு படிவம் 2A தேர்தல் நடத்தும் அலுவலர் அலுவலகமான தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் ஏராளமானோர் பெற்றுச் சென்றனர். முன்னதாக வேட்புமனு தாக்கலை முன்னிட்டு ஏராளமான போலீசார் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டு பலத்த சோதனைக்கு பின்னரே வேப்பமனு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.