இந்தியா கூட்டணி செயல்வீரர் கூட்டம் - அமைச்சர் ஆய்வு
பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக மற்றும் தோழமை கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் தனியார் திருமண மண்டபத்தை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருச்சி மாவட்டம் முசிறியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக மற்றும் தோழமை கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு கலந்து கொண்டு சிறப்புரையாற்ற உள்ளார்.
கூட்டத்தில் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட பெரம்பலூர், லால்குடி, முசிறி, மண்ணச்சநல்லூர், துறையூர், குளித்தலை ஆகிய தொகுதிகளில் உள்ள திமுக மற்றும் தோழமைக் கட்சிகளின் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட, நகர, ஒன்றிய பேரூர் கிளைக் கழக நிர்வாகிகள், முன்னாள், இந்நாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அனைத்து அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், கழக முன்னோடிகள், செயல் வீரர்கள் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் உள்ள தோழமைக் கட்சியினர் அனைவரும் கலந்து கொள்ள உள்ளனர்
.இந்நிலையில்பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி திமுக மற்றும் தோழமை கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெறும் இடத்தை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.