ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது அவசியம்

ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது அவசியம் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.

Update: 2023-12-15 12:52 GMT

ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது அவசியம் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர் கூறியுள்ளார்.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பகுதியில் முன்னாள் மத்திய பஞ்சாயத்துராஜ் அமைச்சர் மணிசங்கர் அய்யர் கூறுகையில் மத்திய பிரதேசம்,ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் தெலுங்கானாவில் மட்டும் காங்கிரஸ் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியைப் பிடித்துள்ளது. 2024 இல் நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலில் எப்படி இருந்தாலும் நாம் கடுமையாக போராட வேண்டும் நாட்டை காப்பாற்ற வேண்டியது தான் அவசியம்.

மயிலாடுதுறை தொகுதியை 2லட்சத்திற்கும் மேலான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று திமுக காப்பாற்றி வைத்துள்ளது. கூட்டணி அடிப்படையில் யாருக்கு எந்த இடம் என தெரிந்த பிறகு தான் நான் நிற்பது குறித்து முடிவு. சென்னை வெள்ள நிவாரணத்திற்கு மத்திய அரசு கொடுத்துள்ள நிதி மிகவும் குறைவாக உள்ளது. . இந்தியா கூட்டணிக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு உண்டு. 2019 தேர்தலில் 37 சதவீத ஓட்டுகள் தான் பாஜகவிற்கு விழுந்துள்ளது. மற்ற கட்சிகளுக்கு 63 சதவீதம் வாக்கு விழுந்தது. அந்த அடிப்படையில் நாம் கூடி எந்த வாக்குகள் பாஜகவுக்கு போகாமல் இருக்க ஜனநாயகத்தை காப்பாற்ற இந்தியா கூட்டணிக்கு வாக்களிப்பது அவசியம் என்றார்.

Similar News