நாடாளுமன்றத் தேர்தலில் இந்திய தேசிய லீக் கட்சி யாருக்கு ஆதரவு ?

நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என, வரும் 7ம் தேதி உயர்மட்ட குழுவில் முடிவு செய்யப்படும் என, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் கூறினார்.

Update: 2024-03-05 13:09 GMT
 நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு என, வரும் 7ம் தேதி உயர்மட்ட குழுவில் முடிவு செய்யப்படும் என, இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் கூறினார்.

விருதுநகர் மாவட்டம் வீரசோழன் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர், வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு ஆதரவு, யாரோடு தொடர்ந்து பயணிப்பது என்று ஏழாம் தேதி உயர்மட்ட குழுவில் முடிவு செய்யப்படும் - இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில தலைவர் பஷீர் அஹமது பேட்டி.

தமிழகத்தில் வறண்ட பகுதியாக இருக்கக்கூடிய 9 மாவட்டங்கள் செழிப்படைய வேண்டும். நீராதாரம் இன்றி இருப்பதால் இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் சென்னை போன்ற நகரங்களுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். காவேரி, வைகை, குண்டாறு இணைப்பு கால்வாய் திட்டத்தை கிடப்பில் போடப்பட்டிருப்பது கவலைக்குரியதாக இருக்கிறது. உடனடியாக தமிழக அரசு கவனம் செலுத்தி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை , சிவகங்கை மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். அதிமுக தலைமை எங்களுடன் தோழமையில் இணைய வேண்டும் என்று எங்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. மனிதநேய மக்கள் கட்சியும், மனிதநேய ஜனநாயக கட்சியும் தங்களுடைய நிலைப்பாட்டை படிப்படியாக அறிவித்து வருகிறது.

எங்கள் கட்சியின் நிலைப்பாட்டை வரும் 7ம் தேதி உயர்மட்ட குழு கூட்டிய பின்பு அறிவிக்க இருக்கிறோம். இருந்தாலும் இரு தரப்பினரும் எங்களுக்கு சமமான அழைப்பு விடுத்து வருகின்றனர். சிறுபான்மை மக்களின் வாக்கு வங்கி மட்டுமே தீர்மானிக்கும் சக்தி. இஸ்லாமிய மக்களுக்கு உரிய விகிதாச்சாரத்தின் அடிப்படையில் சீட்டுகள் வழங்கப்பட வேண்டும். எங்கள் சமூக மக்கள் 6 சதவீத மக்கள் வாழ்கிறார்கள். அதிமுக எங்கள் மீது அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்றும் நாங்கள் விரும்புகிறோம். மேலும் அதிமுக, பாஜக கூட்டணி அமையுமா? அப்படிங்கிற ஒரு சந்தேகத்தை எல்லாரும் கிளம்பி கொண்டிருக்கிறார்கள். அவ்வாறான வாய்ப்பே இனி இல்லை என்பது தான் என் கருத்து. ஏனென்றால் மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சிக்கு என்ன ஆனது என்று எல்லாருக்கும் தெரியும், எப்படி அந்த கட்சியை துண்டு துண்டாக போனது என்றும் தெரியும். முன்னாள் முதலமைச்சர் டாக்டர் செல்வி ஜெயலலிதா அவர்களால் வளர்க்கப் பட்ட, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களால் உருவாக்கப்பட்ட அதிமுக கட்சி தமிழ்நாட்டில் இருக்க வேண்டுமென்றால் நிலைப்பட வேண்டும் என்றால் பாரதிய ஜனதா கட்சி இல்லாமல் இருந்தால் மட்டுமே அந்த கட்சி பாதுகாக்கப்படும்.

இது தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து மக்களின் எண்ணமும் ஆசையும் கூட... எனவே எந்த நிலையில் இருந்தாலும் பாரதிய ஜனதா கட்சியுடன் ஒரு போதும் அதிமுக போகாது என்பது வல்லுநர்கள் கருத்து, என் கருத்தும் கூட அதுதான். என்னவென்றால் சிறுபான்மை மக்கள் அதாவது இஸ்லாமிய, கிறிஸ்துவ, சைனம், பௌத்த மதங்களைச் சார்ந்த மக்களை அழிக்க வேண்டும் என்று எண்ணத்தோடு இருக்கக்கூடிய பாரதிய ஜனதா சங்கப் பரிவாரங்களோடு அதிமுக இனி என்றும் தோழமை கொள்ளாது என்பது என்னுடைய தீர்க்கமான கருத்து என செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் பஷீர் அஹமது கூறினார்.

அப்போது இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில செயலாளர் செய்யது ஜஹாங்கீர்,மாநில பொருளாளர் குத்தூஸ் ராஜா மற்றும் இந்திய தேசிய லீக் கட்சி மாவட்ட நிர்வாகிகள், சிவகங்கை,மதுரை உள்ளிட்ட மாவட்ட பொறுப்பாளர்கள் உடனிருந்தனர்.

Tags:    

Similar News