அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் தாயின் வயிற்றிலேயே சிசு உயிரிழப்பு

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் அரசு மருத்துவர்களின் அலட்சியத்தால் 8 வருடங்களுக்கு பிறகு உருவான சிசு எட்டரை மாதத்தில் தாயின் வயிற்றிலேயே பரிதாபமாக உயிரிழந்தது.;

Update: 2024-03-30 06:08 GMT

அரசு மருத்துவமனை

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அம்மன் பொட்டல் தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் தனது மகள் இசக்கியை, 9 வருடங்களுக்கு முன் தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே உள்ள சுரேஷ்குமார் என்ற ஆட்டோ ஓட்டுனருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர். இது வரை 4 முறை குழந்தை தங்கி அபார்ஷன் ஆகிய நிலையில், 8 வருடங்களுக்கு பிறகு கடந்த வருடம் மீண்டும் இசக்கி கர்பம் அடைந்தார். கடந்த 20 நாட்களுக்கு முன்னதாக மகளை வீட்டுக்கு அழைத்து வந்த தந்தை வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தி உள்ளார். இந்த நிலையில் கடந்த 22ம் தேதி ராஜபாளையம் அரசு மருத்துவரின் ஆலோசனையின் பேரில், காமராஜர் நகரில் உள்ள தனியார் ஸ்கேன் சென்டரில் ஸ்கேன் எடுத்துள்ளார். இதனை அடுத்த நாள் மருத்துவமனைக்கு எடுத்து சென்ற போது அவர்கள் 25ம் தேதி நடைபெறும் கர்பிணிகள் முகாமில் பரிசோதனை செய்து கொள்ளுமாறும் தெரிவித்துள்ளனர். இவர்களும் 25ம் தேதி நடந்த முகாமுக்கு வந்த போது பணியில் இருந்த கிரிஜா மருத்துவர், ஸ்கேன் அறிக்கையை பார்க்காமலேயே குழந்தை நலமுடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இதை நம்பி இசக்கியும் வீட்டுக்கு சென்று விட்டார். இந்த நிலையைில் கடந்த 3 தினங்களாக உடலில் பல்வேறு தொந்தரவுகள் வந்துள்ளது. இதை தாங்க முடியாத இசக்கி தனது தாய் ராக்கம்மாளை அழைத்துக் கொண்டு மீண்டும் அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளார். பரிசேதனையில் குழந்தையின் அசைவு தெரியாததால், மீண்டும் ஸ்கேன் எடுக்க பரிந்துரை செய்துள்ளனர். ஸ்கேன் பரிசோதனையில் குழந்தை இறந்து 3 நாட்கள் ஆனது தெரிய வந்துள்ளது. இந்த அறிக்கையில் குழந்தை வளர்ச்சி 38 வாரம் 3 நாட்கள் என்று உள்ளது. இந்த தகவலை தனியார் ஸ்கேன் நிறுவன ஊழியர் ராமகிருஷ்ணனிடம் தெரிவித்துள்ளார். இதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அவர் அரசு மருத்துவ மனைக்கு சென்று விசாரித்துள்ளார். அங்கு முறையான பதில் கிடைக்காததால், கோபம் அடைந்த ராமகிருஷ்ணன் ஊழியர்களிடம் விசாரித்துள்ளார். இதனை அடுத்து மருத்துவமனை ஊழியர்கள் மூலம் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் வந்து பேச்சு வார்த்தை நடத்தி அவரை சமாதானப்படுத்தினர். பின்னர் இறந்த குழந்தையை வெளியே எடுக்க அவரச வாகனம் மூலம் இசக்கி பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சுகாதார துறை உயர் அதிகாரிகள் முறையான விசாரணை நடத்த வேண்டும் என ராமகிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளார்.
Tags:    

Similar News