மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 2556 கன அடியாக சரிவு.
Update: 2023-12-03 08:09 GMT
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் நேற்று சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,030 கன அடியிலிருந்து 2,556 கன அடியாக குறைந்துள்ளது. நீர்மட்டம் 66.74 அடியாகவும், நீர் இருப்பு 29.96 டி.எம்.சி.யாக உள்ளது. அணையிலிருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வெளியேற்றப்படும் நீரின் அளவைவிட அனணக்கு வரும் நீரில் அளவு கூடுதலாக இருப்பதால் நீர்மட்டம் படிப்படியாக உயர்ந்து வருகிறது.