வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பு
புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.
Update: 2024-03-25 02:04 GMT
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, புதுக்கோட்டை இராணியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் - 2024 தொடர்பாக, 24-திருச்சிராப்பள்ளி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட180-புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில், தேர்தல் பணிபுரியும் வாக்குச்சாவடி தலைமை அலுவலர்கள் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான முதற்கட்ட பயிற்சி வகுப்பினை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா இன்று (24.03.2024) துவக்கி வைத்தார். உடன் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்வி.பா.ஐஸ்வர்யா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா, வட்டாட்சியர் பரணி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.