கட்டுக்கடங்காமல் உயர்ந்த கட்டுமான பொருட்கள்- ஆட்சியரிடம் மனு

கரூரில், கட்டுக்கடங்காமல் உயர்ந்த கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் கட்டிட பொறியாளர் சங்கத்தினர் மனு அளித்தனர்.

Update: 2024-01-30 09:21 GMT

மனு அளித்த கட்டுமான சங்கத்தினர்

கரூர் மாவட்ட ஆட்சியர் கூட்டரங்கில் வாரந்தோறும் திங்கட்கிழமை பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடப்பது வழக்கம். இந்த கூட்டத்திற்கு இன்று கரூர் மாவட்ட கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் பொறியாளர்கள் மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டனர்.

அவர்கள் அளித்த மனுவில், கரூரில் உற்பத்தி செய்யப்படும் கட்டுமான பொருட்களான எம்சாண்ட், பிசாண்ட், ஜல்லி உள்ளிட்ட பொருட்கள் திடீரென 50 முதல் 70 சதம் வரை விலையேற்றம் கண்டதால்,

இந்த பொருட்களை பயன்படுத்தி கட்டுமான பணியில் ஈடுபடும் பொறியாளர்கள், கட்டிட உரிமையாளர்கள், தொழிலாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே,விலையை கட்டுப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட்டுள்ளனர். இது குறித்து செய்தி யாளரிடம் தெரிவித்த கட்டுமான பொறியாளர் சங்கத்தின் தலைவர் பாலசுப்ரமணியன்,

கரூரில் உற்பத்தியாக கூடிய எம்சாண்ட், பிசாண்ட் ,ஜல்லி உள்ளிட்ட பொருட்களை பயன்படுத்தி பிளை ஆஸ், ரெடி மிக்ஸ் கான்கிரீட் உற்பத்தியாளர்கள், ஹாலோ பிளாக் உற்பத்தியாளர்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே, அரசு இந்த விஷயத்தில் தலையிட்டு பொருட்களின் விலை ஏற்றத்தை தடுத்து நிறுத்த வேண்டும். பொதுமக்கள் இந்த பாதிப்பில் இருந்து விடுபட வேண்டும் என்பதற்காக,மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்ததாக தெரிவித்தார்.

Tags:    

Similar News