திருக்கோவலூர் மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி

திருக்கோவலூர் மாணவ, மாணவிகளுக்கு கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2024-02-01 15:12 GMT

கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவம் சார்பில் திருக்கோவலூர் ஸ்ரீ சாரதா வித்யாஷ்ரமம் மேல்நிலைப் பள்ளி ஆறு முதல் பதினோராம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு ஸ்ரீ உலகளந்த பெருமாள் கோயிலில் கல்வெட்டு படியெடுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது.

கல்வெட்டு ஆய்வாளர் சிங்கார உதியன் தலைமையில், திருவள்ளுவர் மாவட்ட தொல்லியல் அலுவலர் லோகநாதன் கல்வெட்டு படிப்பதற்குப் பயிற்சி அளித்தார். கல்வெட்டு சிற்றெழுத்தர்கள், ஜோதி, ஞானப்பிரகாசம், மகாராசன், ஆகியோர் கல்வெட்டுப் படியெடுப்பதற்குச் செயல்முறை விளக்கம் அளித்தனர்.

மாணவர்களுக்கு கோயில் அமைப்பைப் பற்றித் தொல்லியல் ஆய்வாளர் விழுப்புரம் சி.வீரராகவன் விளக்கமளித்தார். தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாவட்டத் தலைவர் மு.கலியபெருமாள், தியாகதுருகம் தமிழறிஞர் துரைமுருகன், சென்னை பத்திரிகையாளர் தாமரைப்பூவண்ணன் ஆகியோர் மாணவர்களைப் பாராட்டிப் பேசினர். .

Tags:    

Similar News