பொது கழிப்பறையை சீரமைக்க வலியுறுத்தல் !
குப்பை சேகரிக்க வந்த மாநகராட்சி லாரி மோதியதில், கழிப்பறையின் நுழைவாயில் பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இதனால் பொது கழிப்பறையை சீரமைக்க வலியுறுத்தி உள்ளனர்.;
By : King 24x7 Angel
Update: 2024-03-11 10:07 GMT
இடிந்த கழிவறை
காஞ்சிபுரம் மாநகராட்சி, வெள்ளகுளம் தென்கரை பகுதிவாசிகளுக்காக, 15 ஆண்டுகளுக்கு முன் பொது கழிப்பறை கட்டடம் கட்டப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் கழிப்பறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், மூன்று ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்வதற்காக அமைக்கப்பட்ட ஆழ்துளைகுழாயின் மின்மோட்டார் பழுதடைந்துவிட்டது. தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. பயன்பாடின்றி உள்ளதால், கழிப்பறை முன் குப்பை கொட்டும் இடமாக மாறியுள்ளது. கடந்த மாதம், குப்பை சேகரிக்க வந்த மாநகராட்சி லாரி மோதியதில், கழிப்பறையின் நுழைவாயில் பகுதி சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது. எனவே, பொதுக் கழிப்பறை கட்டடத்தையும், இடிந்து விழுந்துள்ள நுழைவாயில் பகுதி சுற்றுச்சுவரையும் சீரமைத்து, பொதுக் கழிப்பறையை பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வெள்ளகுளம் தென்கரையினர் வலியுறுத்தி உள்ளனர்.