சாலையில் ஆபத்தான மரத்தை அகற்ற வலியுறுத்தல்

குளச்சல் அருகே சாலையில் ஆபத்தான மரம் அகற்ற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2024-04-29 09:29 GMT
பட்டுப் போன நிலையில் உயர் அழுத்த மின் கம்பிகள் இடையே தென்னை மரம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் - கருங்கல் சாலை இணைப்பு பகுதி இரும்பிலி சந்திப்பில் அரசு டாஸ்மாக் மது கடை உள்ளது. எனவே இந்த சாலையில் காலை முதல் இரவு வரை மது பிரியர்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் டாஸ்மாக் கடை அருகே தனியார் நிலத்தில் பட்டுப்போன தென்னை மரம் ஒன்று எந்த நேரத்திலும்  முறிந்து விழும் ஆபத்தான நிலையில் காணப்படுகிறது.       

அந்த தென்னைமர அருகில் உயர் அழுத்த மின்கம்பிகள் செல்கிறது. காற்று அல்லது மழையில் பட்டுப்போன தென்னை மரம் முறிந்தால் அது மின் கம்பிகள் மீது விழுந்து பெரும் அசம்பாவிதத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. எனவே அசம்பாவிதங்கள் ஏற்படும் முன் பட்டுப்போன அந்த தென்னை மரத்தை உடனே அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் சம்மந்தபட்ட துறையினரை வலியுறுத்தியுள்ளனர்.

Tags:    

Similar News