சீருடை பணியாளர்கள் தேர்வு சரக துணைத் தலைவர் ஆய்வு
ஏற்பாடுகள் சரியான முறையில் செய்யப்பட்டுள்ளதா என ஆய்வு செய்தார்
நாளை தமிழகம் முழுவதும் 3359 காலி பணியிடங்களுக்கான சீருடை பணியாளர்களுக்கான தேர்வு 35 தேர்வு மையங்களில் நடைபெற உள்ளது இந்தத் தேர்வில் 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா கல்வி நிறுவன வளாகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் ஜெயிலர்கள் மற்றும் தீயணைப்புத் துறையினர் காலிப் பணியிடங்களுக்கு நடைபெறும் இந்த எழுத்து தேர்வு நடைபெற உள்ளது.
இதில் 7ஆயிரத்து 112 ஆண்கள், ஆயிரத்து 677 பெண்கள் என8,819 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். விவேகானந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத்தில் 15 பிளாக்குகளில் உள்ள அறைகளில் நடக்க உள்ள.இந்தத் தேர்வு மையத்தை சேலம் சரககாவல்துறை துணைத் தலைவர் (DIG) ராஜேஸ்வரி ஆய்வு செய்தார். இந்த தேர்வை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா, தேவையான பொருட்கள் வந்துள்ளதா, எத்தனை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்,
அவர்களுக்கான பயிற்சி நடத்த வேண்டிய விதம் என்ன என்பது குறித்து தேர்வு நடத்தும் அலுவலரான நாமக்கல் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணனிடம் கேட்டறிந்தார். இந்த தேர்வை பாதுகாப்பாக நடத்த 715 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதாகவும், காலை 9 மணிக்கு தொடங்க உள்ள தேர்வு மதியம்12 40 வரை நடைபெறும் எனவும், தேர்வு எழுத வருபவர்கள் காலை 8 மணி ஒன்பது மணிக்குள் வந்து விட வேண்டும் எனவும் இணையதளத்தில் எடுக்கப்படும் தேர்வுக்கான அனுமதி சீட்டு, அதனுடன் ஒரிஜினல் ஐடி புரூப், கட்டாயம் கொண்டு வர வேண்டும், விலை உயர்ந்த பொருட்கள், எலக்ட்ரானிக் சாதனங்கள் எதையும் கொண்டு வரக்கூடாது எனவும் அறிவுறுத்தப் பட்டுள்ளது.
மேலும் அருகில் உள்ள பேருந்து நிலையங்களில் இருந்து கல்லூரிக்கு வர பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனவும் காவல்துறை தரப்பில் தெரிவித்தனர். இந்தத் தேர்வுசேலம் சரக காவல்துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி மேற்பார்வையில் நாமக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ராஜேஷ் கண்ணன் தலைமையில் நடைபெற உள்ளது எனவும் தெரிவித்தனர். இந்த ஆய்வின்போது மாவட்ட கூடுதல் கண்காணிப் பாளர் கனகேஸ்வரி,திருச்செங்கோடு உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன், திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் பாரதி மோகன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.