பிரதமர் மோடி பொதுக்கூட்ட மைதானத்தில் ஆய்வு
பல்லடத்தில் பிரதமர் மோடி பங்குபெறும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தினை பாஜக மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம் ஆய்வு மேற்கொண்டார்.;
Update: 2024-02-05 02:29 GMT
ஆய்வு
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் நடைபயணம் நிறைவு விழா திருப்பூர் மாவட்டத்தில் நடைபெறவுள்ளதை தொடர்ந்து பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 25.02.2024 அன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நடைபெற உள்ள பொது கூட்டத்திற்கு வருகை தரவுள்ளார். இப்பொதுக்கூட்டமானது பிரமாண்டமான முறையில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் மைதானம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகம், மாவட்டத் தலைவர் செந்தில்வேல், மாவட்ட பொதுச்செயலாளர் சீனிவாசன் ஆகியோர் மைதானத்தை ஆய்வு மேற்கொண்டனர். உடன் மாதப்பூர் தலைவர் அசோக் குமார், மாவட்ட துணைத் தலைவர் வினோத் வெங்கடேஷ், மண்டல் தலைவர்கள் வடிவேலன், சந்தானம் மற்றும் மாவட்ட மண்டல் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.