நீடாமங்கலத்தில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
Update: 2024-01-06 08:26 GMT
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட ஒளிமதி ஊராட்சியில் ரூபாய் 14 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மையத்தினையும், ரூபாய் 13.70 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை நீர் தேக்கத்தொட்டி கட்டப்பட்டு வருவதையும் ,நீடாமங்கலம் பேரூராட்சியில் ரூபாய் 70.79 லட்சம் மதிப்பீட்டில் நடுநிலைப்பள்ளியில் புதியதாக பள்ளி வகுப்பறைகள் கட்டப்பட்டு வருவதையும், ரூபாய் 68.30 லட்சம் மதிப்பீட்டில் முல்லைவாசல் கிராமத்தில் இருந்து பெரம்பூர் சாலை வரை கம்பி சாலை அமைக்கப்பட்டு வருவதையும் மாவட்ட ஆட்சியர் ஆய்வு மேற்கொண்டார் . ஆய்வின் போது நீடாமங்கலம் ஒன்றிய குழு தலைவர் செந்தமிழ் செல்வன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.