தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் ஆய்வு
மத்திய அரசின் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்தின் மூன்று விஞ்ஞானிகள் கொண்ட குழு முனைவர். கோவிந்த ராஜ் அவர்கள் தலைமையில் மேல்புறம் வட்டாரத்தின் தென்னந்தோப்புகளை ஆய்வு செய்தனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் மேல்புறம் வட்டாரத்தில் 1170 எக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. மாறுபட்ட பருவநிலை, மண்வளம், நில அமைப்பு மற்றும் போதிய பராமரிப்பின்மை, மண்ணில் ஊட்டச்சத்துக்களின் சீரற்ற தன்மை முதலியன தென்னை வேர் வாடல் நோய் தொற்று ஏற்பட சாதகமான காரணங்களாக விளங்குகின்றது.
தென்னை வேர்வாடல் நோய் தொற்றின் தீவிரத்தை மதிப்பீடு செய்ய மத்திய அரசின் மத்திய ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை மையத்தின் மூன்று விஞ்ஞானிகள் கொண்ட குழு முனைவர். கோவிந்த ராஜ் அவர்கள் தலைமையில் மேல்புறம் வட்டாரத்தின் தென்னந்தோப்புகளை ஆய்வு செய்தனர். தென்னை வேர் வாடல் நோய்அறிகுறிகள் மற்றும் நோய் பாதிப்பின் தீவிரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வில் கன்னியாகுமரி மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் ஷீலா ஜாண், கன்னியாகுமரி மாவட்டத்தின் தென்னை சாகுபடி குறித்த விவரங்களை எடுத்துரைத்தார். இதில்மேல்புறம் வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் ஆஸ்லின் ஜோஷி, தோட்டக்கலை அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.