வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிட்டு ஆட்சியர் ஆய்வு
அகஸ்தீஸ்வரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னம் பொருத்தும் பணியை ஆட்சியர் ஸ்ரீதர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் தேர்தல் பணிகள் நடைபெறுவதை நேரில் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர் அவர் கூறுகையில்- சட்டமன்ற தொகுதி வாரியாக வட்டாட்சியர் அலுவலகங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர் மற்றும் சின்னங்கள் பொருத்தும் பணியினை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொள்ளப்பட்டதோடு, அனைத்து பணிகளை விரைந்து முடித்திட தேர்தல் பணியில் ஈடுப்பட்டுள்ள அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார். இந்நிகழ்ச்சியில் உதவி தேர்தல் அலுவலர் மற்றும் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் எஸ்.காளீஸ்வரி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர் மற்றம் உதவி இயக்குநர் பேரூராட்சிகள் சத்தியமூர்த்தி, அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் அனில்குமார், துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.