புதிதாக அமையும் நீதிமன்ற கட்டிடம் ஆய்வு

காரியாபட்டியில் புதிதாக அமையவிருக்கும் குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற கட்டிடத்தை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு

Update: 2023-12-23 16:49 GMT
காரியாபட்டியில் புதிதாக அமையவிருக்கும் குற்றவியல் மற்றும் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற கட்டிடத்தை மாவட்ட நீதிபதி நேரில் ஆய்வு
விருதுநகர் மாவட்டம், காரியாபட்டியில் புதிதாக அமைய உள்ள நீதிமன்ற கட்டிடத்தை மாவட்ட அமர்வு நீதிபதி ஜெயக்குமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விரைவில் நீதிமன்றம் திறக்கப்படவுள்ளதால் நீதிமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள வேலைகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். உடன் குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சம்பத்குமார், அருப்புக்கோட்டை சார்பு நீதிபதி ராமலிங்கம், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி பத்மநாபன், காரியாபட்டி பேரூராட்சி தலைவர் செந்தில், காரியாபட்டி பேரூராட்சி செயல் அலுவலர் அன்பழகன், அருப்புக்கோட்டை வழக்கறிஞர்கள் சங்க தலைவர் ஜோபு என்ற ராம்குமார், காரியாபட்டி வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் ஜெயப்பிரகாஷ், அக்னிதேவர், கவியரசன், திருநாவுக்கரசு, சபரிகிரிவாசன், இனியவன், மோகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News