ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து ஆய்வு
திண்டுக்கல் மாவட்டம், பழநி ரேஷன் கடையில் அரிசி கடத்தப்படுவது குறித்து அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.;
Update: 2024-04-25 10:22 GMT
அதிகாரிகள் ஆய்வு
பழனியில் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் ரேஷன் அரிசி கடத்தப்படுவது குறித்து ஆய்வு செய்தனர். ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக எழுந்த தொடர் புகாரை அடுத்து பழனி பகுதியில் உள்ள அரிசி ஆலைகள் மற்றும் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டனர். மாவட்ட வழங்கல் அலுவலர் ஜெயசித்ர கலா, பறக்கும் படை தாசில்தார் அப்ருஸ்வான் மற்றும் உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு ஆய்வாளர் கீதா ஆகியோர் தலைமையிலான அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.