ஆழ்துளை பம்ப் அமைக்கும் பணி
திருப்பூரில் ஆழ்துளை பம்ப் மற்றும் டேங்க் அமைக்கும் பணிகளை சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார்.
Update: 2023-12-14 09:52 GMT
தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க, திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி, வார்டு எண் 45-க்கு உட்பட்ட சுகுமார் நகர் பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ.7.50 இலட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை பம்ப் மற்றும் டேங்க் அமைக்கும் பணிகளை திருப்பூர் வடக்கு மாவட்டக் கழக செயலாளர், தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சிழில் வடக்கு மாநகர செயலாளர், மேயர் தினேஷ்குமார் ,தெற்கு மாநகர செயலாளர் TKT மு.நாகராசன், வடக்கு மாநகர அவைத் தலைவர் ஈஸ்வரமூர்த்தி ,பகுதி செயலாளர் மு.க.உசேன், மற்றும் 45-வது வார்டு கழக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்..