கும்பகோணத்தில் அறிவுசார் மையம் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்பு
கும்பகோணம் மாநகராட்சியில் புதிதாக அறிவுசார் மையம் அமைக்கப்படுவதை வரவேற்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட நிர்வாகக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை வடக்கு மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் இடைக்குழு செயலாளர்கள் கூட்டம் கும்பகோணத்தில் உள்ள மாவட்ட அலுவலகத்தில்.ஏ.எம்.ராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. தேசியக்குழு உறுப்பினர் .வை.சிவபுண்ணியம், மு.எம்.எல்.ஏ பங்கேற்று மாநில நிர்வாகக்குழு முடிவுகளை விளக்கி பேசினார். நடந்துள்ள பணிகள் குறித்து மாவட்ட செயலாளர் மு.அ.பாரதி உரையாற்றினார்.
ஏஐடியூசி மாநில செயலாளர் ஆர்.தில்லைவனம், கட்சியின் மாவட்ட துணைச் செயலாளர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட பொருளாளர் ஏ.ராஜேந்திரன், தமிழ்நாடு விவசாய சங்கத்தின் மாவட்ட செயலாளர் சாமு.தர்மராஜன், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட தலைவர் க.சுந்தர்ராஜன், தங்க.சக்கரவர்த்தி, டி,ஆர்.குமரப்பா, ஏ.ஜி.பாலன், மு.வெங்கடேசன், பொன்.சேகர் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். மாநகர மண்டல அமைப்பாளர் கே.நாராயணன் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கீழ் காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டம் மற்றும் மாநகராட்சி நிதி பகிர்வு மூலம் ரூபாய் 22.69 கோடி மதிப்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் புதிதாக வணிக வளாகம் மற்றும் கும்பகோணம் மாநகராட்சியில் உள்ள காந்தியடிகள் சாலையில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிதாக அறிவுசார் மையம் அமைத்திட மாநகராட்சி எடுத்து வரும் நடவடிக்கையினை பாராட்டி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.