ஜல்லிக்கட்டுக்கான வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

திண்டுக்கல் அருகே தவசிமேடையில் ஜல்லிக்கட்டுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதையொட்டி வாடிவாசல், தடுப்பு வேலிகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

Update: 2024-02-17 11:51 GMT

அதிகாரிகள் ஆய்வு 

திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி ஒன்றியம், தவசி மேடையில் புனித அந்தோணியார் கோவில் திருவிழாவை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம்.

இந்த ஜல்லிக்கட்டை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்து ஜல்லிக்கட்டை கண்டு ரசிப்பார்கள். இந்த ஆண்டு நாளை (18ந் தேதி) ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.இதையொட்டி வாடிவாசல், தடுப்பு வேலிகள் உள்ளிட்டவை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இதனை கோட்டாட்சியர் கமலக்கண்ணன், கால்நடை இணை இயக்குனர் ராம்நாத், உதவி இயக்குனர் அப்துல் காதர், கிழக்கு தாசில்தார் முத்துராமன், ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.

Tags:    

Similar News