வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்
ஆத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 284 வாக்கு சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்களை அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற உள்ள மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை ஏப்ரல் 19 ம்தேதி காலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூர் சட்டமன்ற தொகுதியில் 284 வாக்கு சாவடி மையங்களுக்கு தேர்தல் இயந்திரங்கள் EVM,VV PAD,CONTROL UNIT,BALLET UNIT,உள்ளிட்ட வாக்குப்பதிவுக்கு தேவையான எழுது பொருள்கள், மை உள்ளிட்ட கருவிகள் புகைப்படத்துடன் ௯டிய வாக்காளர் பட்டியல் அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இதில் ஆத்தூர் வருவாய் கோட்டாட்சியரும், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பிரியதர்ஷினி தலைமையில் ஆத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இருந்து 284 வாக்கு சாவடிகளுக்கும் வாக்கு இயந்திரங்கள் துப்பாக்கிகள் ஏந்திய கூடுதல் போலீசார் வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்த வாகனத்திலேயே அனுப்பும் பணி நடைபெற்று வருகிறது.வாக்குச்சாவடிக்கு செல்லும் ஒவ்வொரு வாகனத்திலும் ஒரு வாக்குச்சாவடி அலுவலர் உதவி வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் துணை ராணுவத்தினர் அடங்கிய குழுவினர் அனுப்பி வைக்கப்பட உள்ளனர்.