பள்ளிபாளையத்தில் தர்பூசணி பழம் விற்பனை தீவிரம்

கோடையில் வெயில் கொளுத்துவதால் பள்ளிபாளையத்தில் தர்பூசணி பழம் விற்பனை அதிகரித்துள்ளது

Update: 2024-02-21 11:20 GMT


கோடையில் வெயில் கொளுத்துவதால் பள்ளிபாளையத்தில் தர்பூசணி பழம் விற்பனை அதிகரித்துள்ளது


கோடை காலம் தொடங்கி உள்ள நிலையில் பொதுமக்கள் நீர்ச்சத்து மிகுந்த இயற்கை பானங்கள் மற்றும் பழங்களை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றனர். தர்பூசணி சீசன் துவங்கியுள்ளதால், பள்ளிபாளையத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தர்பூசணி விற்பனை செய்யும் கடைகள் கணிசமாக அதிகரித்துள்ளது.

பள்ளிபாளையம் திருச்செங்கோடு சாலையில் சாலையோரம் கடை நடத்தி வரும் நல்லம்மாள் என்பவரிடம் இதுகுறித்து கேட்டபொழுது தற்போது கோடை காலம் நெருங்கி உள்ளதால் தர்பூசணி பழங்களை பொதுமக்கள் விரும்பி வாங்கி செல்கின்றனர்.

தோராயமாக ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்.. அதுவே சிறு துண்டுகளாக பத்து ரூபாய் முதல் 20 ரூபாய் வரை பழங்களின் அளவை பொறுத்து விற்பனை செய்து வருகிறோம். திண்டிவனம் போன்ற வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவு வாங்கி வந்து விற்பனை செய்வதாக சக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர் ஆனால் நாங்கள் அருகில் உள்ள ஈரோடு சந்தையிலே குறைந்த விலையில் வாங்கி வருகிறோம். அடுத்தடுத்த நாட்களில் வெள்ளரிக்காய் மற்றும் இளநீர் ஆகியவற்றை அதிகளவு விற்பனைக்கு கொண்டு வர உள்ளதாக தெரிவித்தார்.

Tags:    

Similar News