கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் ஒரே நாளில் தீவிர மாணவர் சேர்க்கை

கெங்கவல்லி ஒன்றியம் முழுவதும் ஒரே நாளில் தீவிர மாணவர் சேர்க்கை - ஆசிரியர்களுக்கு வாழ்த்து

Update: 2024-03-10 09:17 GMT

கெங்கவல்லி

கெங்கவல்லி:சேலம் மாவட்டம் இந்த கல்வியாண்டான 2024-25-க்கான மாணவர் சேர்க்கையை மார்ச் 1ஆம் தேதி முதல் தொடங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. தமிழகம் முழுவதும் 5 வயது முதல் 6 வயதுக்கு உட்பட்ட பிரிவு குழந்தைகள் மொத்தம் 3,31,666 பேர் உள்ளனர். இதில் சேலம் மாவட்டத்தில் மட்டும் 19,242 குழந்தைகள் உள்ளனர். கெங்கவல்லி ஒன்றியத்தில் கடந்த வருடம் 466 பேராக மாணவர் சேர்க்கை இருந்தது. அதனையடுத்து வரும் கல்வியாண்டிற்கு மாணவர் சேர்க்கைக்கு 583 என்ற இலக்கை தொடக்கக்கல்வித்துறை குறிப்பிட்டிருந்தது. ஒன்றியம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு நிதியுதவிபெறும் பள்ளிகளில் வெள்ளிக்கிழமை மட்டும் சேர்க்கை 55 பேரைத் தாண்டியது. இது நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் 9 சதவீதத்தைத் தொட்டுள்ளது. இதற்கு கெங்கவல்லி வட்டாரக் கல்வி அலுவலர் ர.ஸ்ரீனிவாஸ் தலைமையில் வட்டார வளமைய மேற்பார்வையாளர்( ராணி, ஆசிரிய பயிற்றுநர்கள் அனைவரும், மாணவர் சேர்க்கையில் ஈடுபட்ட பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர், ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர்கள்.
Tags:    

Similar News