அடையாறில் தீவிர தூய்மை பணி - ஆணையர் ஆய்வு
அடையாறு கஸ்தூரி பாய் நகர், இரயில்வே வாகன நிறுத்த இடம், மாநகராட்சி மியாவாக்கி பூங்கா குப்பை மற்றும் தோட்டக் கழிவுகளை தூய்மைப்படுத்தும் பணியினைப் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் ஆய்வு செய்தார்.;
Update: 2024-01-21 04:54 GMT
ஆணையர் ஆய்வு
கூடுதல் தலைமைச் செயலாளரும் மாநகராட்சி ஆணையாளருமான இராதாகிருஷ்ணன் பெருநகர சென்னை மாநகராட்சி, அடையாறு மண்டலத்திற்குட்பட்ட கஸ்தூரி பாய் நகர் இரயில்வே வாகன நிறுத்த இடம் மற்றும் மாநகராட்சி மியாவாக்கி பூங்கா ஆகிய இடங்களில் தீவிரத் தூய்மைப் பணியின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் நீண்ட நாட்களாக காணப்படும் குப்பை மற்றும் தோட்டக் கழிவுகளை அகற்றும் பணியினைப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு, அலுவலர்களுக்கு ஆலோசனைகளை வழங்கினார். இந்த ஆய்வின்போது, மண்டல அலுவலர், செயற்பொறியாளர்கள், உதவி செயற்பொறியாளர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.