இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டம் !!
சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில் அனுமதி வழங்கப்படாததால் போலீசார் கைது செய்தனர்.
By : King 24x7 Angel
Update: 2024-03-01 11:26 GMT
இடைநிலை ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை நிறைவேற்றி தர வலியுறுத்தி கடந்த 13 நாட்களாக சென்னையில் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் தொடர்ச்சியாக தமிழகம் முழுவதும் இடைநிலை ஆசிரியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை மைதானத்தில் 5வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று இடைநிலை ஆசிரியர்கள் கோட்டை மைதான பகுதியில் தமிழக அரசு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து இடைநிலை ஆசிரியர்கள் சாலையோரம் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாததால் ஆசிரியர்களை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்தனர். 130 பெண்கள் ஆண்கள் 76 பேர் என 206 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். இது குறித்து ஆசிரியர்கள் கூறும்போது:- பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு 5200 மட்டுமே அடிப்படை ஊதியமாக நிர்ணயம் செய்யப்பட்டதால் கடந்த 14 ஆண்டுகளாக பாதி அளவிற்கு ஊதிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவித்தனர்.