நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான உள் தணிக்கை: அதிகாரிகள் ஆய்வு
நீலகிரி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை பணிகள் தொடர்பான உள் தணிக்கையில் அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டனர்.
Update: 2024-05-18 11:20 GMT
தமிழகம் முழுவதும் நெடுஞ்சாலைத்துறை சார்பில் நடைபெறும் சாலை மற்றும் பாலம் கட்டுமான பணிகள் தொடர்பாக உள் தணிக்கை குழு அமைத்து ஆய்வு நடத்தி வருகிறது. இந்நிலையில், ஊட்டியில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்தின் கீழ் நடைபெற்று வரும் பணிகள் குறித்து ஆய்வு செய்ய, தேசிய நெடுஞ்சாலை கண்காணிப்பு பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையில், கோவை தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் தனபாலன், ஊட்டி தேசிய நெடுஞ்சாலை உதவிக் கோட்டப் பொறியாளர் ராஜா மற்றும் ஊட்டி தேசிய நெடுஞ்சாலை இளநிலைப் பொறியாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. தும்மனட்டி, டி-மணிஹட்டி சாலையில் தும்மனாடா பகுதியில் நடைடுபற்ற சாலைப் பணிகள் குறித்து ஆய்வு நடைபெற்றது. சாலையின் தரம், உறுதித் தன்மை, அளவுகள் உள்ளிட்டவை ஆய்வு டுசய்யப்பட்டன. ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளர் குழந்தைராஜு, கோபிசெட்டிபாளையம் தேசிய நெடுஞ்சாலை கோட்டப் பொறியாளர் செல்வன், ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிக் கோட்டப் பொறியாளர் ஜெயப்பிரகாஷ், ஊட்டி தரக்கட்டுப்பாட்டு உதவிக் கோட்டப் பொறியாளர் பாரிஜாதம் மற்றும் ஊட்டி நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு உதவிப் பொறியாளர் ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்றனர்.