ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரியில் சர்வதேச மாநாடு !
ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரியில் சர்வதேச மாநாடு மூன்று நாள்கள் சர்வதேச மாநாடு நடைபெற்றது.
By : King 24x7 Angel
Update: 2024-03-20 09:17 GMT
ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கல்லூரியில் சர்வதேச மாநாடு ஊத்தங்கரை ஸ்ரீவித்யா மந்திர் கலை அறிவியல் கல்லூரியும் (தன்னாட்சி) கணிதத் துறை, கணினி அறிவியல் மற்றும் கணினி பயன்பாட்டுத் துறையும் பெங்களூர் ஜெரி ஜிம் அகாடமி, கும்பகோணம் டி.ஜே அகாடமியும் இவற்றுடன் , ஈரோடு வேளாளர் கல்லூரி, கோவை, நிர்மலா கல்லூரி ,பெங்களூர் ஆர்.வி. பொறியியல் கல்லூரி, திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி, இராமக் கிருஷ்ணாமிஷின் கல்லூரி இணைந்து மூன்று நாள்கள் சர்வதேச மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டிற்கு கல்லூரியின் நிறுவனர் திருமிகு வே. சந்திரசேகரன் அவர்கள் தலைமைத் தாங்கினார். கல்லூரியின் முதல்வர் முனைவர் ந. குணசேகரன் அவர்கள் வாழ்த்துரை ஆற்றினார். கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் தே.கவிதா அவர்கள் வரவேற்புரையாற்றினார். மாநாட்டின் நோக்கம் குறித்து கணிதத் துறைத் தலைவர் முனைவர் சி. இராகவன் அவர்கள் எடுத்துரைத்தார். டாக்டர் சஞ்சீவ் ஆனந்த் சாகு அவர்கள் ஜார்கண்ட் ஐ.எஸ்.எம் தொழில்நுட்பக் கல்லூரிப் பேராசிரியர் அவர்கள் பயன்பாட் கணிதத்தில் ஆராய்ச்சிக்கான நுழைவாயில் என்ற தலைப்பில் உரையாற்றினார். டாக்டர் கிளமென்ட் ஜோ ஆனந்த் பெங்களூர் மெளண்ட் கார்மல் கல்லூரிப் பேராசிரியர் கணித வடிவமைப்பு மற்றும் மாற்றம் என்ற தலைப்பில் உரையாற்றினார். டாக்டர் ஆர்.பிரகாஷ், பெங்களூர் ஆர்.வி. பொறியியல் கல்லூரிப் பேராசிரியர் அவர்கள் அறிவியல் மற்றும் பொறியியல் பயன்பாடுகளுக்கான கணிதம் என்ற தலைப்பில் ஆய்வுரை நிகழ்த்தினார். டாக்டர் சாந்த லைஸ் ராம் புதுதில்லி இந்திய புள்ளியியல் நிறுவனப் பேராசிரியர் அவர்கள் எண் கோட்பாடு மற்றும் குறியாக்கவியல், பாதுகாப்பான தகவல் தொடர்புகளின் அறிவியல் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இரண்டாம் நாள் நிகழ்வில் டாக்டர் பாதல்லா ஏ. ரிகான், அரேபியா அறிவியல் கல்லூரிப் பேராசிரியர் அவர்கள் வேறுபட்ட சமன்பாடுகள் மற்றும் பயன்பாடுகள் என்ற தலைப்பில் ஆய்வுரை ஆற்றினார். டாக்டர் முகமது இம்ரான் ஆஸ் ஜாட் , பாகிஸ்தான் நிர்வாகவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகப் பேராசிரியர் அவர்கள் போக்குவரத்து நிகழ்வுகளின் மாதிரியாக்கம் என்ற தலைப்பில் உரையாற்றினார். டாக்டர் ஜி.முகுதீன், சவுதி அரேபியா தாபக் பல்கலைக்கழக பேராசிரியர் அவர்கள், இயற்கணித கோட்பாட்டின் பயன்பாடுகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். டாக்டர் பி. கார்த்திகேயன், பெருந்துறை கொங்கு பொறியியல் கல்லூரி பேராசிரியர் அவர்கள், உயர் கல்வியில் செயற்கை நுண்ணறிவு என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். மூன்றாம் நாள் நிகழ்வில் (20.3.24) டாக்டர் ஓவிடு பக்தாசர், இங்கிலாந்து பொறியியல் பல்கலைக்கழக பேராசிரியர் அவர்கள் வடிவவியலில் பாரம்பரிய முடிவுகள் மற்றும் சமீபத்திய முன்னேற்றங்கள் என்ற தலைப்பில் உரையாற்றினார். டாக்டர் தீப் ஜோதி கோசாமி அவர்கள், அசாம் டெல்பூர் பல்பலைக் கழக பேராசிரியர் அவர்கள், நேவியர் ஸ்டோக்ஸ் சமன்பாடுகளுக்கான மதிப்பீடு என்ற தலைப்பில் ஆய்வுரை ஆற்றினார். டாக்டர் கவிக்குமார் ஜேக்கப், மலேசியா துன் உசேன் பல்கலைக்கழக பேராசிரியர் அவர்கள் கணிதத்திற்கான ஆழமான கற்றல் அணுகுமுறைகள் என்ற தலைப்பில் உரையாற்றினார். டாக்டர் முகமது பிலால் ரியாஸ், செக், ஒஸ்டராவா தொழில் நுட்ப பல்கலைக்கழக பேராசிரியர் அவர்கள், நுண்கணிதபயன்பாடுகளும் சிக்கல்களும் தீர்வுகளும் என்ற தலைப்பில் உரை நிகழ்த்தினார். இம்மாநாட்டில் பிற மாநிலங்களிலிருந்தும், பிற கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களும் பங்கேற்று சிறப்பித்தனர். பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கி சிறப்பிக்கப்பட்டன. முனைவர் எஸ்.செந்தில்குமார் கணிதத் துறை பேராசிரியர் முனைவர் சி. இராஜகோபால், திரு.ஜி.இரமணன் கணினி அறிவியல் துறை பேராசியர்களும் திரு.கே.ஸ்ரீதர், கணினி பயன்பாட்டுத் துறை பேராசிரியர் ஆகியோர் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தனர். நிகழ்வுகளை முனைவர் ஜெ.வெங்கடேசன் அவர்கள் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் முனைவர் எஸ்.ஜெயக்குமார், கணிதத்துறைப் பேராசிரியர் அவர்கள் நன்றியுரை ஆற்றினார்.