திண்டுக்கல் : சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா
மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என, கலெக்டர் பூங்கொடி தெரிவித்தார்;
Update: 2023-12-04 07:08 GMT
சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்
திண்டுக்கல் ஓம்சாந்தி சி.பி.எஸ்.சி பள்ளியில் நடந்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழாவில் கலெக்டர் பூங்கொடி பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் மாற்றுத்திறனாளிகளுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்துகிறார். பொது கட்டடங்களில் தடையற்ற சூழல் அமைத்தல், நவீன உதவி உபகரணங்கள் வழங்குதல்,மறுவாழ்வு உதவிகள் திட்டங்களுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் நலனை பாதுகாக்க மக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றார்.