சிவகாசியில் சர்வதேச யோக தினம்: ஏராளமான மாணவ,மாணவிகள் பங்கேற்பு
சிவகாசியில் சர்வதேச யோக தின நிகழ்ச்சியில் ஏராளமான மாணவ,மாணவிகள் பங்கேற்றனர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் அசோக் தலைமையில் நடைபெற்றது. நாட்டு நலப்பணி அலுவலர் சதீஷ்குமார் வரவேற்றார்.
சிறப்பு விருந்தினர்களாக விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா இளைஞர் அலுவலர் ஞானச்சந்திரன், விருதுநகர் மாவட்ட சுகாதார ஆய்வாளர் ராஜ்குமார் கலந்து கொண்டனர். மாணவ, மாணவிகளுக்கு யோகாசனப் போட்டிகள் நடைபெற்றன. வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.யோகா பயிற்சியாளர்கள் ரமேஷ், அசோக் பயிற்சியளித்தனர்.
மகளிர் மன்றத் திட்ட அலுவலர் அவர்கள் ரிஃபாயாமீரா நன்றி கூறினார். ஏற்பாட்டினை விருதுநகர் மாவட்ட நேரு யுவகேந்திரா, கல்லூரி உடற்கல்வி துறை செய்திருந்தனர். இதேபோன்று சிவகாசி, தி ஸ்டாண்டர்டு ஃபயர் ஒர்க்ஸ் இராஜரத்தினம் மகளிர் கல்லூரியில் சர்வதேச யோகா தினம் உடற்கல்வித்துறை மூலம் நடத்தப்பட்டது. விழாவிற்கு கல்லூரி முதல்வர், இரா.சுதாபெரியதாய் தலைமை தாங்கினார்.
உடற்கல்வி இயக்குநர் விஜயகுமாரி வரவேற்புரையாற்றினார். சிறப்பு விருந்தினராக மருத்துவர் மணிமேகலா,யோகா ஆசிரியர் மணிமாலா ஆகியோர் கலந்து கொண்டனர்.உடற்கல்வித்துறை, என்எஸ்எஸ் மற்றும் என்சிசி மாணவிகள் சேர்ந்து யோகாசனங்களை செய்து காண்பித்தனர்.யோகா சங்கல்பமும் எடுத்துக்கொண்டனர். பெண்களின் நலவாழ்வில் யோகாவின் பங்கு என்ற தலைப்பில் பேச்சுப்போட்டி நடத்தப்பட்டு மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. உதவி உடற்கல்வி இயக்குநர் சசிபிரியா நன்றி கூறினார்.
படம் விளக்கம், சிவகாசி, அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் உலக யோகா தினத்தை முன்னிட்டு சிறப்பு யோகா நிகழ்ச்சி கல்லூரி முதல்வர் அசோக் தலைமையில் நடைபெற்றது.