சத்துணவு கூடங்களுக்கு சர்வதேச தரச் சான்று
நாகை மாவட்ட சத்துணவு கூடங்களுக்கு வழங்கப்பட்ட சர்வதேச தரச் சான்றுகளை கலெக்டர் ஜானி டாம் வர்கீஸ் வழங்கினார்
முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவின் ஒரு பகுதியாக மாநிலம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் உள்ள சத்துணவு கூட்டங்களை மேம்படுத்திடவும் சுகாதாரமான உணவை மாணவர்களுக்கு வழங்கிடவும் முதல் கட்டமாக 60 பள்ளிகளில் சத்துணவு சமையல் அறையில் சர்வதேச தரச் சான்று வழங்கிட தமிழ்நாடு அரசு முடிவு எடுத்தது அதற்கான ஆய்வு பணிகள் நடைபெற்றது.
தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நிறுவனத்தின் தணிக்கை குழுவினர் பல்வேறு ஆய்வு மேற்கொண்டதற்கு பிறகு நாகப்பட்டினம் மாவட்டம் நாகை அக்கரைப்பேட்டை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றியம் அத்திபுலியூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,வேதாரண்யம் ஒன்றியம் குரவப்புலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ,வேதாரண்யம் ஒன்றியம் பெரிய குத்தகை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி என ஐந்து பள்ளிகளில் உள்ள சத்துணவு கூடங்களுக்கு தரச் சான்று வழங்கப்பட்டு அவற்றை நாகை மாவட்ட ஆட்சித்தலைவர் ஜானிடம் வர்கீஸ் மூலம் அந்தந்த பள்ளி நிர்வாகம் வழங்கப்பட்டது. மாநிலம் முழுவதும் 100 சத்துணவு குணங்கள் தரச் சான்று பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டன. இதன் மூலம் தரமான சத்தான உணவு மாணவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது